இந்திய செய்திகள்

அயோத்திக்கு தமிழ்நாட்டில் இருந்து முதல் ரயில் இன்று புறப்படுகிறது!

தமிழகத்திலிருந்து, அயோத்தி ஶ்ரீ ராமர் கோவில் செல்லும் பக்தர்களுக்காக, மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அரசு, தமிழகத்திலிருந்து 34 சிறப்பு ரயில்களை இயக்குகிறது. இந்த ரயில்கள், கோவை, மதுரை, கன்னியாகுமரி ஆகிய நகரங்களில் இருந்து அயோத்திக்குச் செல்லவிருக்கின்றன.

தமிழகத்தில் இருந்து அயோத்தி ஶ்ரீராமர் கோவிலில் தரிசனம் செய்ய ஒரு லட்சத்திற்கும் அதிகமாக பக்தர்கள் பதிவு செய்துள்ளனர். அவர்களின் பயணக் கட்டணம், உணவு, தங்குமிடம் மற்றும் தரிசனக் கட்டணங்கள் உள்ளிட்டவற்றை மத்திய அரசே ஏற்றுக்கொள்கிறது.

அயோத்தி செல்வதற்கான முதல் சிறப்பு ரயில், இன்று மாலை, கோவையிலிருந்து புறப்படவிருக்கிறது.

பாஜக மாநில தலைவர் திரு.அண்ணாமலை அவர்கள் வாழ்த்து .தமிழகத்தில் இருந்து, அயோத்தி ஶ்ரீராமர் கோவில் தரிசனத்துக்குச் செல்லவிருக்கும் பக்தர்கள் அனைவருக்கும் சிறப்பான, மன நிறைவான தரிசனம் கிடைக்க, வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

Related Posts