இந்திய செய்திகள்

சிங்கப்பூரில் இருந்து இந்தியா சொல்பவர்களுக்கு இனி ஏர்சுவேதா படிவம் தேவையில்லை !

இந்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி நவம்பர் 22 முதல் வெளிநாடுகளிலிருந்து இந்தியா வருகை தருபவர்களுக்கு ஏர் சுவேதா படிவம் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருகை தருபவர்கள் AirSUVIDHA என்ற சுயவிவர படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும் இதன் மூலம் சிறிய சிரமங்களையும் பயணிகள் எதிர்நோக்கினார் .

ஏர் சுவேதா சுய விவரம் படிவம் பூர்த்தி செய்வதில் அதிக அளவில் சிக்கல்கள் ஏற்பட்டதால் அதனை எளிமையான முறையில் பூர்த்தி செய்ய அந்த படிவம் மாற்றியமைக்கப்பட்டது. பின்பு இந்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 2022 நவம்பர் 22 முதல் ஏர் சுவேதா விண்ணப்பத்தை வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருகை தருபவர்கள் பூர்த்தி செய்யத் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது .

Related Posts