திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து குளிர்கால துவக்கத்தை ஒட்டி சிங்கப்பூரிலிருந்து திருச்சிக்கும் திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கும் தினசரி விமான சேவையை வழங்குகிறது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்.
Winter Shedule 2022 திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் திருச்சியிடையே பல்வேறு விமான நிறுவனங்கள் விமானத்தை இயக்கி வருவது வழக்கம் .தற்போது தினசரி சேவையை வழங்க முன் வந்துள்ளது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் .
ஏர் இந்தியா குளிர்கால விமான சேவை அட்டவணைப்படி சிங்கப்பூரிலிருந்து திருச்சிக்கும் திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கும் தினசரி சேவையை அக்டோபர் 30 முதல் மார்ச் 24 -2023 ஆம் தேதி வரை வழங்குகிறது.
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்திற்கான டிக்கெட்டுகளை அதிகாரப்பூர்வ ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் இணையதளம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மூலம் பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .