இந்திய செய்திகள்

ஏர் இந்தியாவின் புதிய விமானம் 18,000 கிமி நில்லாமல் பயணிக்கும்-அதன் சிறப்பம்சங்கள் .

ஏன் இந்தியாவின் முதல் அகலமான உடல் கொண்ட ஏர் பஸ் ஏ350 விமானம் டிசம்பர் 23ஆம் தேதி இந்திய தலைநகரம் டெல்லியில் தரை இறங்கியது .

ஏர் பஸ் ஏ350 விமானத்தில் 300 முதல் 350 பயணிகள் வரை பயணிக்க முடியும் மூன்று விதமான வகுப்புகளை கொண்ட விமானம் இது ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிக இட வசதி சொகுசான பறக்கும் அனுபவத்தை வழங்கக்கூடிய விமானமாகவும் இதனை ஏர் பஸ் நிறுவனம் வடிவமைத்து இருக்கின்றது. இதனால்தான் இந்தியர்கள் பெரும் அளவில் எதிர்பார்க்கும் விமானமாகவும் இது அமைந்துள்ளது. மிக முக்கியமாக ஏர் இந்தியாவின் விமான போக்குவரத்து சேவையை அடிக்கடி பயன்படுத்துவோரை இந்த தகவல் மகிழ்ச்சியில் ஆழ்த்திருக்கிறது அந்த அளவிற்கு ஒரு உலகத்தரம் வாய்ந்த விமானமே ஏர்பஸ் ஏ350.

Related Posts