இந்திய செய்திகள்

கேரளா வயநாட்டில் அவதிப்படும் மக்கள் நிதி உதவி செய்த நடிகர் பிரபாஸ்! எவ்வளவு தெரியுமா ?

கேரளாவில் வயநாட்டில் உள்ள மூன்று கிராமங்கள் நிலச்சரிவின் காரணமாக மண்ணுக்குள் புதைந்தது. அதிகாலையில் ஏற்பட்ட இந்த நிலச்சரிவு காரணமாக பலரும் தங்களது வாழ்வாரத்தை இழந்து தவித்து வருகின்றனர் .

தற்ப்போதுவரை 300க்கும் மேற்பட்ட மக்கள் மரணித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது வயநாட்டில் கஷ்டப்படும் மக்களுக்கு திரையுலகை சேர்ந்த நடிகர் பலரும் தங்களால் முடிந்த நிதி உதவிகளை செய்து வருகின்றனர்.

தற்போது பிரபல நடிகர் பிரபாஸ் ரூபாய் இரண்டு கோடி நிவாரண நிதி கொடுத்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. வயநாட்டில் கஷ்டப்பட்டு வரும் மக்களுக்கு உதவி செய்துள்ள பிரபாஸுக்கு பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள் .

Related Posts