சிங்கப்பூரில் புக்கிட் பாடோக் தெரு (Bukit Batok) பகுதியில் தீ விபத்து…!!!

SDFC

சிங்கப்பூரில் புக்கிட் பாடோக் தெரு பகுதியில் நேற்று மதியம் (ஜனவரி 14) மதியம் 2.40 மணியளவில் இடத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக SCDF தெரிவிக்கப்பட்டுள்ளது.

4-வது மாடியில் உள்ள படுக்கையறையில் தீ விபத்து ஏற்பட்டது. SCDF வருவதற்கு முன்பே யூனிட்டில் இருந்தவர்கள் காலி செய்துவிட்டனர்.

புக்கிட் பாடோக் தீயணைப்பு நிலையத்திலிருந்து தீயணைப்பு வீரர்கள் நுழைந்து தண்ணீர் ஜெட் மூலம் தீயை அணைத்தனர். தீ விபத்தால், படுக்கையறை வெப்பம் மற்றும் புகை சேதத்தால் பாதிக்கப்பட்டது.
காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.