சிங்கப்பூரில் கோலாகலமாக தொடங்கிய ஒளியூட்டு…!!! பொங்கல் பண்டிகையை கொண்டாட இந்திய மரபுடைமை நிலையம் ஏற்பாடு.

lisha

சிங்கப்பூரில் ஆண்டுதோறும் பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் சிங்கப்பூரில் வசிக்கும் தமிழர்கள் தங்கள் குடும்பத்தினருடன் பொங்கல் விழாவை பாரம்பரிய முறையில் கொண்டாடி வருகின்றனர். சிங்கப்பூரில் லிட்டில் இந்தியா கடைக்காரர்கள் மற்றும் இந்திய மரபுடைமை நிலையம் இணைந்து பொங்கல் விழாவை கொண்டாட ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.

இந்த வகையில் ஜனவரி 14 ஆம் தேதி பொங்கல் விழாவை கொண்டாட பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து பொங்கல் பண்டிகையின் சிறப்பு அம்சமாக ஒளியூட்டு நேற்று தொடங்கியது. இந்த ஒளியூட்டு மாலையில் வண்ண விளக்குகளால் எரியூட்டுவது ஆகும். இந்த நிகழ்ச்சி பிப்ரவரி மாதம் வரை நடைபெற உள்ளது.

இந்த நிகழ்ச்சியை இந்திய மரபுடைமை நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் சிங்கப்பூர் அமைச்சர்கள் எஸ்.ஈஸ்வரன் மற்றும் ஆல்வின் டான் ஆகியோர் குத்துவிளக்கேற்றி ஒளியூட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சிறப்புரையாற்றினர். அதேபோல் நிகழ்ச்சியில் அமைக்கப்பட்டுள்ள பொங்கல் விழாவை விளக்கும் கண்காட்சியை பார்வையிட்டனர்.

அதோடு பிரத்தியேகமாக பண்ணையில் உள்ள பசுக்களை அமைச்சர்கள் பார்வையிட்டனர். கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக குறைந்த எண்ணிக்கையில் அழைப்பாளர்கள் மட்டுமே விழாவில் கலந்து கொண்டனர். மற்றவர்கள் அனைவரும் வீட்டில் இருந்தபடியே நிகழ்ச்சியை சமூக வலைத்தளங்களில் மூலம் கண்டுகளித்தனர்.

இந்தப் பொங்கல் விழாவில் பல்வேறு போட்டிகளை நடத்த இந்திய மரபுடைமை நிலையம் ஏற்பாடுகளை செய்துள்ளது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணத்தினால் முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். மேலும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்புவோர் இணையதள பக்கத்தில் பதிவு செய்யவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.