சீனப் புத்தாண்டு வருகையையொட்டி புலி அஞ்சல் தலைகளை வெளியிட்ட சிங்கப்பூர் அஞ்சல் துறை…!!!

postal

சிங்கப்பூரில் சீனப்புத்தாண்டு பிப்ரவரி 1ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த வருட புத்தாண்டு புலி ஆண்டாக கொண்டாடப்பட உள்ளது. அதில் சிங்கப்பூரிலுள்ள சைனாடவுன் என்ற பகுதியில் புலிகளால் அலங்கரிக்கப்பட்டு வண்ணமயமான காட்சி அளிக்கப்படுகிறது. சிங்கப்பூரில் சீன புத்தாண்டு புலி ஆண்டாக கொண்டாடுவதையொட்டி சிங்கப்பூர் அஞ்சல் துறை புலி படத்துடன் கூடிய அஞ்சல் தலைகளை நேற்று வெளியிட்டது.

இந்த புலி அஞ்சல் தலைகளை லிம் ஆன் லிங் (Lim An-Ling) வடிவமைத்துள்ளார். இதுகுறித்து சிங்கப்பூர் அஞ்சல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் புலி ஆண்டில் பிறந்தவர்கள் துணிச்சலானவர்கள், போட்டித் திறன் கொண்டவர்கள் நம்பிக்கை கொண்டவர்களாக இருப்பார்கள். மேலும் அஞ்சல்தலைகள் 0.30 சிங்கப்பூர் டாலர் முதல் 1.40 சிங்கப்பூரர்களுக்கு விற்கப்படுகிறது. இதில் இரண்டு அஞ்சல் தலைகள் கொண்ட பேக் 4.15 சிங்கப்பூர் டாலருக்கு விற்கப்படுகிறது.

மற்றவை 3.10 சிங்கப்பூர் டாலருக்கு விற்கப்படுகிறது இந்த அஞ்சல் தலைகளை வாங்க விரும்புவோர் அனைத்து அஞ்சல் நிலையங்களிலும், அஞ்சல் தலை விற்பனை செய்யும் கடைகளிலும், சிங்கப்பூர் அஞ்சல் துறையின் அதிகாரபூர்வ இணையதள பக்கத்திலும் பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம்.

இந்த ஆண்டு ஜனவரி 11-ம் தேதி முதல் பிப்ரவரி 2ஆம் தேதி வரை பண்டிகை காலத்தில் அஞ்சல் தலையை பயன்படுத்தி சிங்கப்பூர் மற்றும் வெளிநாட்டு முகவரிக்கு வாழ்த்து அட்டை அனுப்பும் வாடிக்கையாளர்களுக்கு அஞ்சல் கட்டணத்தில் தள்ளுபடி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதை குறித்து வேறு ஏதேனும் தகவல் பெற அஞ்சல் துறையின் அதிகாரபூர்வ இணையதள பக்கத்தை அணுகலாம் என கூறப்பட்டுள்ளது.