சிங்கப்பூரில் கோலாகலமாக கொண்டாடப்படும் பொங்கல் விழா – இந்திய மரபுடைமை நிலையம் ஏற்பாடு…!!!

pongal festival

சிங்கப்பூரில் ஆண்டுதோறும் பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சிங்கப்பூரில் ஒவ்வொரு ஆண்டும் சிங்கப்பூரில் வசிக்கும் தமிழர்கள் தங்கள் குடும்பத்தினருடன் பொங்கல் விழாவை பாரம்பரிய முறையில் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் லிட்டில் இந்தியா கடைக்காரர்கள் மற்றும் மரபுடைமை சங்கம் ஆகியோர் ஒன்றிணைந்து “Lisha ” என்ற அமைப்பை நடத்தி வருகின்றனர்.

அதில் தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி வருகின்றது. தற்போது Lisha அமைப்பு பொங்கல் விழாவை மிக சிறப்பாக கொண்டாடி வருகிறது. இந்நிலையில் இன்று 81 2022 தற்போது நடைபெறும் நிகழ்ச்சியில் பொங்கல் விழாவிற்கான ஒளியூட்டு தொடங்கி வைக்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

இதனால் பொங்கல் விழாவையொட்டி லிட்டில் இந்தியா முழுவதும் இன்று முதல் பிப்ரவரி மாதம் வரை வண்ண விளக்குகளால் காட்சி அளிக்கும். அதே போல் Lisha அமைப்பு பல்வேறு போட்டிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது. மேலும் பொங்கல் விழா வருவதையொட்டி இன்று முதல் ஜனவரி 16ஆம் தேதி வரை நிகழ்ச்சிகள் மற்றும் பொங்கல் விழா குறித்து சிறுவர்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

‘Campbell Lane’ உள்ள இந்திய மரபுடைமை நிலையத்தின் (Indian Heritage Centre) தலைமை அலுவலகத்தில் நிகழ்ச்சிகளும் போட்டிகளும் நடைபெறுகின்றன. மேலும் பொங்கல் விழாவை குறித்து கண்காட்சிகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கண்காட்சியில் பொங்கல் பானை, கரும்பு உள்ளிட்டவை தத்துரூபமாக அமைக்கப்பட்ட காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிகழ்வை தமிழர்கள் மட்டுமல்லாமல் சிங்கப்பூரில் வாழும் மக்கள் வந்து பார்வையிட்டு புகைப்படத்தை எடுத்து செல்கின்றனர். மேலும் கோமளா விலாஸ் (Komala Vilas) என்ற பண்ணை திறக்கப்பட்டு அங்கு மாடுகள் வரவழைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் சிறப்பு அம்சமாக தஞ்சாவூர் ஓவிய பயிலரங்கு(Tanjore Art Workshop), மண்டேலா புள்ளி ஓவிய பயிலரங்கு(Mandala Dot Painting Workshop) உள்ளிட்டவை நடைபெற உள்ளது.

இந்நிகழ்ச்சியில் கொரோனா தடுப்பூசி இரண்டு தவணை போட்டுக் கொண்டவர்கள் மட்டுமே நேரடியாக பங்கேற்கலாம். ஏற்கனவே இணையத்தில் பதிவு செய்து கொண்டவர்கள் பங்கேற்க முடியும். மற்றவர்கள் இணையவழி மூலம் நிகழ்ச்சியில் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வைக் குறித்து விபரங்கள் அறிய https://www.indianheritage.gov.sg/en என்ற இணையதள பக்கத்தில் சென்று அறிந்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.