சிங்கப்பூரில் குறைத்து வரும் வேலையின்மை விகிதம் – மனிதவள அமைச்சர் டான் சீ லெங்.!

employee

மனிதவள அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களில் கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாத நிலவரப்படி சிங்கப்பூரில் வேலையின்மை விகிதம் தொடர்ந்து குறைந்து வருவதாக கூறப்பட்டுள்ளது.

2021 நவம்பர் மாத வேலையின்மை நிலவரப்படி குடியிருப்போர் வேலையின்மை 3.2 சதவீதமாக குறைந்து உள்ளதாக கூறப்படுகிறது. இது முந்தைய கால வேலையின்மையை ஒப்பிடும்போது 3.4 சதவீதமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சிங்கப்பூரில் வாழும் குடிமக்களின் வேலையின்மை 3.5 சதவீதமாக இருந்தது முன்பு வேலையின்மை 3.6 சதவீதமாக இருந்தது.

சிங்கப்பூரில் ஒட்டுமொத்த வேலையின்மை 2.6 சதவீதத்தில் இருந்து 2.5 சதவீதமாக குறைந்துள்ளது. மேலும் மனிதவள அமைச்சர் டான் சீ லெங் கூறுகையில் தொடர் சரிவு சிங்கப்பூர் ஊழியர் சந்தை நிலையாக மீண்டு பெறுவதை குறிக்கும் என கூறப்பட்டுள்ளது.