Indigo Airlines – திருச்சி வழியாக திருப்பதி மற்றும் சிங்கப்பூர் இடையே விமான சேவை தொடக்கம்…!!!

indigo

இண்டிகோ ஏர்லைன்ஸ்(Indigo Airlines) நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில் திருச்சி வழியாக திருப்பதி மற்றும் சிங்கப்பூருக்கு விமான சேவை தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் வரும் ஜனவரி 18ம் தேதி முதல் இரு மார்க்கத்திலும் விமான சேவை தொடரும் என அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.

இந்த விமான சேவையில் வாரத்தில் செவ்வாய் ,புதன், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய நான்கு நாட்கள் சேவை வழங்கப்பட உள்ளது. அதோடு சிங்கப்பூர் இருந்து திருச்சிக்கு செல்லும் விமானம் 6E 35 என்ற பெயரில் இயக்கப்படும். அதேபோல் திருச்சியில் இருந்து திருப்பதிக்கு செல்லும் விமானம் 6E 7068 என்ற பெயரில் இயக்கப்படும்.

அதோடு திருப்பதியில் இருந்து திருச்சிக்கு செல்லும் விமானம் 6E 7067 என்ற பெயரில் இயக்கப்படும். மேலும் திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு செல்லும் விமானம் 6E 37 என்ற பெயரில் இயக்கப்படும் என இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த விமான சேவை குறித்த அட்டவணை, டிக்கெட் முன்பதிவு போன்ற தகவலை பெற https://www.goindigo.in/ என்ற இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விமான பயண டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது. திருச்சி வழியாக விமானங்கள் இயக்கப்படுவதால் சிங்கப்பூரில் இருந்து தமிழ்நாட்டுக்கு வரும் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என கூறப்படுகிறது.

இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் திருச்சி, சென்னை உட்பட விமான நிலையங்களில் இருந்து சிங்கப்பூருக்கு இரு மார்க்கத்திலும் விமான சேவையை தொடர்ச்சியாக வழங்கி வருகிறது.