சிங்கப்பூரில் சீனப் புத்தாண்டை முன்னிட்டு பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள “புலி அலங்காரம்”…!!!

tiger

சீனப்புத்தாண்டு வரவேற்கும் விதமாக சைனாடவுன் (Chinatown) பகுதி கோலாகலமாக புத்தாண்டை வரவேற்க ஆயத்தமாகி வருகிறது. அதே சைனாடவுன் பகுதி புத்தாண்டுக் கொண்டாட்டத்திற்காக அலங்காரங்களால் வண்ண மயமாக்கப்பட்டுள்ளது.

அப்பகுதி முழுவதும் புதிய புலி ஆண்டை வரவேற்கும் வகையில் பிரம்மாண்டமாக புலி அலங்காரங்கள் செய்யப்பட்டு பகுதி முழுவதுமே வண்ணமயமாக காட்சியளிக்கிறது.

மேலும் Upper Cross Street மற்றும் New Bridge ரோட்டில் மக்களை கவரும் வகையில் பெரிய காட்சி அலங்காரங்கள் காட்சிப் படுத்தப்பட்டுள்ளது.

அதோடு துவக்க நிகழ்வுகள் மற்றும் தெரு ஒளியூட்டு நிகழ்வுகள் நாளை அதிகாரப்பூர்வமாக ஜனவரி 7ஆம் தேதி தொடங்கும்.

அதே சமயம் இரவில் புலி வண்ண விளக்குகளால் ஒளிரும் காட்சி அனைவரிடமும் மிரட்டலாக காட்சி அளிக்கிறது. இந்த புலி அலங்காரத்தை பல புகைப்பட கலைஞர்கள் அங்கு சில காட்சிகளை படம்பிடித்து செல்வது அரங்கேறி வருகிறது.