சிங்கப்பூரில் இருந்து நாகூர் சென்ற “சிறப்புக்கொடி”.. தமிழ்நாட்டில் புகழ்பெற்ற நாகூர் தர்கா சந்தக்கூடு விழா!

nagoor

தமிழ்நாட்டில் நாகூரில் உலக பிரசித்தி பெற்ற ஆண்டவர் தர்கா உள்ளது. இந்த தர்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி 465ஆம் ஆண்டு கந்தூரி விழா நேற்று (ஜனவரி 4) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

விழாவில் முக்கிய நிகழ்வான சந்தன கூடு ஊர்வலம் 13-ஆம் தேதி வியாழக்கிழமை நடக்கிறது. இவ்விழாவில் சிறப்பு அம்சமாக பயன்படுத்தப்படும் சிறப்பு கொடி சிங்கப்பூரிலிருந்து நாகூர் கொண்டு வரப்படுவது வழக்கம்.

அதோடு சிங்கப்பூரிலிருந்து கொண்டு வரப்படும் சிறப்பு கொடி ஊர்வலமாக வீதிகளில் எடுத்துச் சென்று நாகூர் தர்காவை வந்தடையும்.

மேலும் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு விழா வரும் 13-ஆம் தேதி நாகையில் இருந்து புறப்பட்டு அடுத்த நாள் 14 அன்று அதிகாலை நாகூர் தர்கா வந்தடையும்.