புத்தாண்டை கோலாகலமாக கொண்டாடிய வெளிநாட்டு ஊழியர்கள்…!!!

gift

சிங்கப்பூர் மனிதவள அமைச்சகம் (Singapore Ministry of Manpower) தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் சிங்கப்பூரில் தங்கி பணிபுரியும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் கொண்டாடிய கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களை ஒரு முறை நினைவு கூறுவோம்.

சிங்கப்பூரில் AGWO என்றழைக்கப்படும் ‘Alliance of Guest Workers Outreach’ நிறுவனம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக கிறிஸ்மஸ் மரம் ஒன்றை அமைத்து அவர்களுக்கு பயன்பெறும் வகையில் பராமரிப்பு பாக்கெட்டுகளை (Care Packs) விநியோகித்தது. மேலும் Dormitory ஆபரேட்டரான, ‘McKnight Engineering Pte Ltd’ உடன் இணைந்து சிங்கப்பூர் ஃப்ளையர் (Singapore Flyer) மற்றும் புத்தாண்டு ஈவ் (New Year’s Eve) பயணத்திற்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அழைத்து வந்தனர்.

அதோடு வெஸ்ட்லைட் டோ குவானில் (Westlite Toh Guan), விளையாட்டுகளுடன் ஒரு ஒரு மினி கார்னிவல் அழைக்கப்பட்டு புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு “சாண்டா கிளாஸ்” வேடமணிந்த தன்னார்வலர்கள் புத்தாண்டு பரிசுகளை வழங்கினார்.

மேலும் நார்த்லேண்ட் ஆரம்பப் பள்ளி (Northland Primary School) மாணவர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் மனதைக் கவரும் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தனர். அதோடு புலம்பெயர் தொழிலாளர்களுடன் கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட முன்வந்த பலதரப்பட்ட கூட்டாளிகளை கண்டு நாங்கள் மகிழ்கிறோம். அதேபோல் தொழிலாளர்களை நினைத்து அவர்களுடன் பண்டிகையை மகிழ்ச்சியாக பகிர்ந்து கொடுத்ததற்கு நன்றி என கூறியுள்ளார்.