வெளிநாட்டு ஊழியர்களுக்கு புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக உணவு வழங்கிய Burgerkingsg நிறுவனம்…!!!

burger

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களின் நலனுக்காக பல்வேறு தன்னார்வ அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. அதில் குறிப்பிடும்படியான அமைப்பாக செயல்பட்டு வரும் ItsRainingRaincoats என்ற அமைப்பு.

இந்த அமைப்பின் தன்னார்வலர்கள் மூலம் வெளிநாட்டு ஊழியர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களும் வழங்கப்பட்டுள்ளது. தற்போது கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு அவர்களுக்காக அந்த அமைப்பின் தன்னார்வலர்களின் மூலம் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.

1000க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பர்கர் உணவு வழங்கியதற்காக @burgerkingsgக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். தொழிலாளர்களுக்கு புத்தாண்டு போன்ற சந்தர்ப்பங்களில் கொண்டாட்டத்திற்கான பல வழிகள் இல்லை, எனவே அவர்கள் இந்த நிகழ்வைக் குறிக்கவும் புதிய ஆண்டை வரவேற்கவும் உதவியது.