திருச்சி – சிங்கப்பூர் இடையேயான டிக்கெட் முன்பதிவு தொடக்கம் – ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அறிவிப்பு …!!!

flight

திருச்சி மற்றும் சிங்கப்பூர் இடையேயான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் (Air India Express) விமான சேவை இரு மார்க்கத்திலும் தினசரி விமான சேவை தொடர்ந்து வழங்கி வருகிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் ஜனவரி, பிப்ரவரி, மார்ச் ஆகிய மூன்று மாதங்களுக்கான விமான டிக்கெட் முன்பதிவு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் தொடங்கி உள்ளது.

இந்நிலையில் விறுவிறுப்பாக விமான டிக்கெட் முன்பதிவு நடைபெற்று வருகிறது. இதில் குறிப்பாக ஜனவரி மாதத்தில் பொங்கல் பண்டிகை, தைப்பூசம் ஆகிய பண்டிகைகள் வருவதால் டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெறுகிறது.

இதே நிலை தொடர்ந்தால் ஓரிரு நாட்களில் திருச்சி சிங்கப்பூர் இடையேயான விமான சேவை டிக்கெட் முன்பதிவு அனைத்தும் விற்று தீர்ந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு திருச்சியிலிருந்து சிங்கப்பூருக்கு IX 682 என்ற பெயரில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் இயங்குகிறது. அதேபோல் சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு IX 681 என்ற பெயரில் விமானம் இயக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு வரும் பயணிகள் சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் மேற்கொள்ளப்பட்டுள்ள விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் திருச்சி சிங்கப்பூர் இடையேயான விமான டிக்கெட் முன்பதிவு தொடர்பான விபரங்களுக்கு  https://www.airindiaexpress.in/en  என்ற அதிகாரப்பூர்வ இணைய தள பக்கத்தை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.