மின்சார வாகன சந்தையில் அடியெடுத்து வைக்கும் 25 ஆண்டுகள் அனுபவம் உள்ள Soh Wei Ming…!!!

electric car

உலகம் முழுவதும் எரிப் பொருட்களால் இயக்கப்படும் வாகனங்களில் இருந்து வெளிவரும் புகையால் காற்று மாசுபடுகிறது. இதனால் உலக நாடுகள் முழுவதும் எரிபொருளுக்கு மாற்றாக மின்சார சக்தியை பயன்படுத்தி வாகனங்களை இயக்க திட்டமிடப்படுகிறது. இதன் மூலம் மின்சார சக்தியை பயன்படுத்தி புதிய வகை வாகனங்களை தயாரித்து வருகிறது.

அதோடு முன்னணி கார் நிறுவனங்களும் மின்சார சக்தியை பயன்படுத்தி புதிய வகை கார்களை அறிமுகப்படுத்தி வருகின்றனர். இந்த வாகனங்களை மக்கள் வாங்கும் வகையில் மானியம் உள்ளிட்ட சலுகைகளை அரசு வழங்கி வருகிறது. இதனால் மின்சார கார்களை வாங்க மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

அதோடு மின்சார கார்களை வாங்குபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் மின்சார உற்பத்தியும் அதிக அளவில் உயர்ந்துள்ளது. இதில் சிறப்பு அம்சமாக சிங்கப்பூரில் பெரும்பாலானோர் மின்சார வாகனங்களை அதிக அளவில் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.

ஆகையால் நகரம் முழுவதும் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் மையங்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சீனாவில் உள்ள புகழ்பெற்ற வோல்ஸ்வேகன் வாகன தயாரிப்பு நிறுவனத்தில் உயர் அதிகாரியான சோ வெய் மிங் (வயது 55), இவர் பிரெஞ்சு வாகன தயாரிப்பு நிறுவனமான ரெனால்ட் நிறுவனத்தின் சீன பிரிவின் தலைவராகவும், தலைமை நிர்வாகியாக பணிபுரிந்து வருகிறார்.

இவர் கார் உற்பத்தியில் 25 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். தற்போது உலகின் மிகப்பெரிய சந்தையாக உருவாகிவரும் மின்சார வாகன சந்தையில் நுழைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.