சிங்கப்பூரில் இந்த மாதம் முழுவதும் அதிக மழைக்கு வாய்ப்பு…!!! குளிர்ச்சியான வானிலை தொடரும்.

rain

சிங்கப்பூரில் இந்த மாதம் தொடர்ச்சியில் இருந்து குளிர்ச்சியான வானிலை காணப்படுகிறது. இந்த மாதம் ஜனவரியில் சில நாட்கள் 23 டிகிரி செல்சியஸ் வரை வானிலை குறைவாக இருக்கும் என சிங்கப்பூர் வானிலை ஆய்வு மையம்(MSS) தெரிவித்துள்ளது.

மேலும் அடுத்த வாரம் மழை குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஆதலால் ஜனவரி மாதத்தில் வெப்பநிலை 23°C முதல் 31°C வரை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு மழை பொழிவு இருப்பதால் வானிலை மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் அடுத்த 15 நாட்களில் தினசரி வெப்பநிலை 24°C முதல் 33°C வரை இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.மேலும் சில நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பொழிய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக மதிய வேளைகளில் இடியுடன் கூடிய மழை இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் தென் சீனக் கடலில் வடகிழக்கு காற்று காரணமாக சிங்கப்பூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் அவ்வப்போது மிதமான மழை மற்றும் கனமான இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.