வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி புரியும் “குட்டி” தன்னார்வலர்…!!! குவியும் பாராட்டுகள்.

little

சமீபத்தில் மலேசியாவில் பல பகுதிகளில் கடுமையாக வெள்ளம் பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். அந்நாட்டு மக்கள் தனது விடாமுயற்சியாலும் மன உறுதியாலும் வெள்ளத்தில் இருந்து மீண்டு வந்துள்ளனர்.

கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு தன்னார்வ அமைப்புகள் ஒன்றிணைந்து உதவி கரம் நீட்டினார். அதோடு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னார்வலர்கள் மட்டுமல்லாமல் பொதுமக்களும் ஒன்றிணைந்து தங்களால் இயன்ற உதவிகளை செய்துவந்தனர். மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய வயது ஒரு தடையில்லை என நிரூபிக்கும் வகையில் குட்டி தன்னார்வ தொண்டர் ஒன்றிணைந்து உதவி கரம் நீடியுள்ளார்.

அவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். எனவே “வயது ஒரு தடையில்லை என்பதை நிரூபிக்கும் குட்டி தன்னார்வத் தொண்டர்களுக்கு பாராட்டுக்கள்” என்ற தலைப்புடன் சமூகவலைத்தள பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்துள்ளனர்.

அதில் சிவப்பு நிற சட்டை தன்னார்வலர் குழுவின் சீருடை மற்றும் மஞ்சள் நிற ரப்பர் பூட்ஸ் அணிந்து இருந்த சிறுவரின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் ட்வீட் செய்யப்பட்டுள்ளது. இந்த பதிவு டிசம்பர் 28 அன்று பகிரப்பட்டு 6000க்கும் மேற்பட்ட ட்வீட்களையும் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லைக்குகளும் பெற்றுள்ளது.

மேலும் குட்டி தன்னார்வலர் வெள்ளம் பாதித்த பகுதியில் இருந்து மண்வெட்டி பயன்படுத்தி மண் எடுப்பதை போன்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இதனை கண்ட நெட்டிசன்கள் மத்தியில் பெரும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.