உலக அளவில் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரரை வீழ்த்தி முதலிடம் பெற்ற சிங்கப்பூர் வீரர் லோ கியான் யூ (Loh Kean Yew) …!!!

badmiton

உலக அளவில் 26வது பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி (Badminton World Championships) ஸ்பெயின் நாட்டில் ஹுயெல்வா (Huelva) நகரில் நடைபெற்றது. நேற்று (டிசம்பர் 19 ) இறுதிப்போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் மற்றும் சிங்கப்பூர் வீரர் லோ கியான் யூ (Loh Kean Yew) என்பவர் போட்டியில் எதிர்கொண்டார்.

இந்த போட்டியில் ஆரம்பம் முதலே லோ கியான் யூ போட்டியில் ஆதிக்கத்தை செலுத்தினார். இந்நிலையில் முதல் செட்டில் இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்திற்கு மிகவும் சவாலான அமைந்தது. அதோடு சிங்கப்பூர் வீரர் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தியதால் இரண்டாவது சுற்றில் இந்திய வீரர் போராடித் தோற்றார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டி 45 நிமிடங்கள் நீடித்தது. அதனால் சிங்கப்பூர் வீரர் லோ கியான் யூ 21 – 15, 22 – 20 என்ற நேர் செட் கணக்கில் இந்திய வீரரை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார். இந்த வெற்றியின் மூலம் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் முதல் முறையாக சிங்கப்பூரில் வீரர் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.

அவருக்கு முதல் பரிசாக தங்க பதக்கமும் வழங்கப்பட்டது. சிங்கப்பூர் வீரர் வெற்றியை அறிந்த சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப், பிரதமர் லீ சியன் லூங் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதன் மூலம் இறுதிப் போட்டியில் தோற்றாலும் முதல் உலக பேட்மிட்டன் சேம்பியன்ஷிப் இரண்டாவது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். உலக அளவில் சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். அவருக்கு இந்திய தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.