மலேசியாவில் கடும் வெள்ளம் 21,000 பேர் நிவாரண முகாம்களில் தஞ்சம்…!!!

flood

மலேசியாவில் கடுமையாக வெள்ளம் பாதிக்கப்பட்டு 21,000 மக்கள் பத்திரமாக நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அதில் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்கள் பெரும்பாலானோர் சிலாங்கூரில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட வீடு மற்றும் உள்கட்டமைப்பு பழுது பார்ப்பதற்காக மலேசிய அரசாங்கம் வாரியம் RM100 மில்லியன் நிதி ஆரம்ப தொகையாக ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்க உள்ளதாக பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் அறிவித்தார்.

மேலும் குறைந்தது 15,000 பேர் 100க்கும் மேற்பட்ட நிவாரண மையங்களில் அனுப்பப்பட்டுள்ளார். நேற்று டிசம்பர் 18 பெய்த மழை அளவு ஒரு மாதத்தில் பெய்த மழைக்கு சமம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.