சிங்கப்பூரில் உதவியாளராகப் பணிபுரிந்த பெண் ஊழியரின் 20 ஆண்டு கால சொந்த வீடு வாங்கும் கனவு நிறைவேறியது…!!!

worker

கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக சிங்கப்பூரில் பணிபுரியும் பெண் ஊழியர் இறுதியாக சொந்த வீடு ஒன்றை வாங்கியுள்ளார். சிங்கப்பூரில் வீட்டுப் பணிப்பெண்களாக பல பிலிப்பைனியர்கள் வேலை பார்க்கிறார்கள்.

மொத்தம் 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் பணிபுரிவதாக இணையம் தெரிவித்துள்ளது. ஆனால் பல பேர் வேலை செய்து மட்டுமே நாம் வாழ்க்கையை கழிக்கிறோம். ஆனால் சொந்த வீடு இல்லையே என்ற ஏக்கம் பல ஊழியர்களிடம் உள்ளது.

மேலும் பணிப்பெண் கூறுகையில் 2000 ஆம் ஆண்டு சிங்கப்பூருக்கு வந்தேன். நான் முதலில் ஜூரோங்கில் உள்ள ஒரு குடும்பத்தில் வேலை பார்த்தேன். நான் ஏஜென்சிகள் செலுத்த வேண்டிய தொகை அதிகமாக இருந்தது.

அதனால் என்னால் முடிந்த அளவிற்கு சேமித்து வீட்டிற்கு அனுப்பி வைத்தேன் என்றார். ஆனால் என் சகோதரனை வளர்க்க உதவுவதற்கம் தொடர்ந்து அதிகரிக்கும் வாடகை காரணமாக குடும்பத்தில் பெற்றோர்கள் சம்பாதிக்கும் பணமும் போதுமானதாக இல்லை.

தன் குடும்பத்தை முன்னேற்ற வேண்டும் என ஒரே குறிக்கோளுடன் கடினமாக உழைத்து பணத்தை சேமிப்பதில் கவனம் செலுத்தினேன். சுமார் சிங்கப்பூரில் 20ஆண்டுகாலம் பணிபுரிந்து தனது கடின உழைப்பு மற்றும் முயற்சியால் சொந்த வீடு கனவு நினைவாக உள்ளது என்று கூறியுள்ளார்.