சிங்கப்பூரில் இருந்து திருச்சி சென்ற 282 பயணிகளுக்கு RT-PCRபரிசோதனை

சிங்கப்பூரிலிருந்து திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையம் வந்தடைந்த 282 பயணிகளுக்கு கொரோனா RTPCR மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது .

இந்தியாவினால் At Risk நாடுகள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன நாடுகளிலிருந்து வருகை தரும் பயணிகளுக்கு நோய்த்தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இந்த நோய்த்தொற்று பரிசோதனை முடிந்து முடிவுகள் வெளிவருவதற்கு 4 முதல் 6 மணி நேரம் ஆகின்றன பரிசோதனை முடிவுகள் வரும்வரை அனைத்து பயணிகளும் விமான நிலையத்திற்கு உள்ளேயே வைக்கப்படுகிறார்கள் .

சிங்கப்பூர் மற்றும் At Risk நாடுகளிலிருந்து வருகை தரும் உறவினர்களை அழைக்க வருபவர்கள் 4 மணி நேரம் காலதாமதமாக விமான நிலையத்திற்கு வருகை தருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.