மக்கள் சேவகர் திரு.அன்பரசன் பிறந்தநாள் விழா .

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள ஆலங்கோட்டையில் Scord தொண்டு நிறுவனத்தின் சார்பில் அதன் நிறுவனர் நினைவில் வாழும் திரு. அன்பரசு அவர்களின் பிறந்த நாள் விழா நடைபெற்றது.

நடைபெற்ற இந்நிகழ்வில் பயனாளிகளுக்கு சான்றிதழ் வழங்குதல் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

பள்ளி மாணவ மாணவியர்களுக்கு மரக்கன்றுகளை நடும் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் மரக்கன்றுகளும் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள். அரசு அமைப்பினை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர் .

நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களை வரவேற்றார் திரு. S. பாபுராஜன் இயக்குனர் ஸ்கார்டு தொண்டு நிறுவனம்.

நிகழ்ச்சிக்கான தலைமை உரையாற்றினார் திருவாரூர் JSs தலைவர் திருமதி.M.கௌசல்யா அன்பரசன் அவர்கள்.

திட்டத்திற்கான விளக்க உரையாற்றினார் திரு. PM.பாலகிருஷ்ணன் இயக்குனர் JSs திருவாரூர்.

பயனாளிகளுக்கு சான்றிதழ் வழங்கி சிறப்புரையாற்றினார் திரு.R.மணிவண்ணன் மாவட்ட கல்வி அலுவலர் .

வருகை தந்த பயனாளிகள் தொண்டு நிறுவன நிர்வாகிகள் மற்றும் அரசுத்துறை சார்ந்த பிரதிநிதிகளுக்கு நன்றி தெரிவித்தார் திரு.P.திருலோகசந்தர் திட்ட அலுவலர் Jss.திருவாரூர் .