அதிராம்பட்டினத்தில் 3000 பேருக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சி.

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் கடற்கரையோர கிராம மக்களுக்கு சுமார் 3 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதற்கான பணியினை ராஜாமடம் ராமகிருஷ்ண சாரதா குழந்தைகள் காப்பகத்தின் நிறுவனர் Dr.ஆர்.எஸ். மணிவண்ணன் மேற்கொண்டு வருகிறார் .

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் ராஜாமடம் ஊராட்சி கீழத்தோட்டம் கடற்கரை கிராமத்தில் கடும் மழை வெள்ளம் காரணமாக தஞ்சாவூர் ராமகிருஷ்ணா மடத்தின் தலைவர் தவத்திரு விமூர்த்தியானந்தா மகராஜ் தலைமையிலும், திருவாரூர் டாக்டர் திரு கோபாலகிருஷ்ணன் அவர்கள் முன்னிலையிலும் நாளொன்றுக்கு ஆயிரம் நபருக்கு காலை மற்றும் மாலை அன்னதானம் வழங்கப்படுகிறது. இவை தொடர்ந்து 3 நாட்களுக்கு (30,01,02) வழங்கப்படுகிறது.. இந்த நிகழ்ச்சியினை தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் ராஜாமடம் கிராமத்தில் இயங்கிவரும் ஸ்ரீ ராமகிருஷ்ண சாரதா ஆதரவற்றோர் குழந்தைகள் காப்பகம் மற்றும் முதியோர் இல்லம் நிர்வாக இயக்குனர் டாக்டர் திரு R.S. மணிவண்ணன் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்து வருகிறார்.

அதிராம்பட்டினம் அருகே உள்ள ஸ்ரீ. ராமகிருஷ்ண சாரதா குழந்தைகள் காப்பகம் ஸ்ரீ ராமகிருஷ்ணா மடத்தின் வழிகாட்டுதலின் பேரில் செயல்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்தியா முழுவதும் ராமகிருஷ்ணா மடம் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வருகிறது. அனைத்து ராமகிருஷ்ணா மடத்தின் தலைமையகமாக செயல்படுவது கல்கத்தாவிலுள்ள ஸ்ரீராமகிருஷ்ணா மடம் என்பதும் குறிப்பிடத்தக்கது .