சிங்கப்பூரிலிருந்து தமிழகம் செல்லும் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்-ஒமிக்ரான் கொரோனா வைரஸ் பரவல்.

இந்தியா:ஒமிக்ரான் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த வேண்டும் என மாநில அரசுகளுக்கு இந்திய மத்திய அரசு அறிவுறுத்தி இருந்தது. அதன்படி வெளிநாடுகளிலிருந்து மாநிலங்களுக்கு வரும் பயணிகளை கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது .

தற்போது வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வருகை தரும் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது தமிழக அரசு.

ஒமைக்ரான் கொரோனா பரவல் எதிரொலியாக 12 நாடுகளில் இருந்து தமிழகம் வரும் பயணிகளுக்கு கட்டுப்பாடு

தென்ஆப்பிரிக்கா, பிரிட்டன், பிரேசில், வங்கதேசம், மொரீஷியஸ், நியூசிலாந்து, ஜிம்பாப்வே, சிங்கப்பூர், ஹாங்காங், இஸ்ரேல், போட்ஸ்வானா, சீனா ஆகிய நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா நெகடிவ் சான்றிதழ் கட்டாயம்.

தமிழ்நாட்டிற்கு வந்து இறங்கிய பிறகும் மீண்டும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

– தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை