வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் அதிகரிப்பு -RTPCR Test கட்டாயம்.

வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு RTPCRமருத்துவ பரிசோதனை கட்டாயம் .

இந்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் வெளிநாடுகளிலிருந்து இந்தியா வருகை தரும் பயணிகளுக்கான கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விமான பயணத்திற்கு 72  மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனா  இல்லை என்ற சான்றிதழை Air Suvidha இணையதளத்தில் பதிவேற்றம் செய்து பதிய வேண்டும் .

பயணிகளை இந்தியாவிற்கு அழைத்து வரும் விமான நிறுவனங்கள் பயணிகளுக்கு எவ்வித நோய் தொற்றுக்கான அறிகுறியும் இருந்தால் விமானத்திற்குள் அனுமதிக்கப்பட கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் விமானத்தினுள் விமான நிறுவனங்கள் நோய்த்தொற்று பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு தேவையான கையேடுகளை வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகள் இந்தியா வந்து இறங்கிய உடன் அவர்களுக்கு நோய் தொற்றுக்கான அறிகுறிகள் இருந்தாலோ அல்லது வேறு ஏதும் அறிகுறிகள் ஏற்பட்டால் அவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டுமா அல்லது குறிப்பிட்ட இடத்தில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டுமா என அதிகாரிகள் முடிவு செய்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 1-ஆம் தேதி முதல் கூடுதல் மருத்துவ பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இந்திய சுகாதார அமைச்சகம் வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு  செயல்படுத்த இருப்பதாக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒமிக்கிரான் என்ற புதிய வகை காரோனா திரிபு காரணமாக இந்த கட்டுப்பாடுகள் தற்போது அமல்படுத்தப்பட்டு உள்ளன .

இந்தியா வருகை தரும் பயணிகளுக்கு முதற்கட்ட பரிசோதனை ஆக உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு விமானத்தினுள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல் விவரங்களுக்கு இந்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பினை கீழே பார்க்கலாம் .