கெளரவ டாக்டர் பட்டம் பெற்ற சமூக சேவகர் Dr.Rs. மணிவண்ணன்

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே ராஜாமடம் பகுதில் செயல்பட்டு வருகிறது. ராமகிருஷ்ண சாரதா குழந்தைகள் காப்பகம் மற்றும் முதியோர் இல்லம் இந்த காப்பகத்தை நிருவி நிர்வகித்து வருபவர் தான் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டம் பிச்சன்கோட்டகம் வடபாதி கிராமத்தைச் சேர்ந்த R.s.மணிவண்ணன்.

இவரின் சமூக சேவையை கவுரவிக்கும் வகையில் மதுரையில் 27-11-2021 இன்று நடைபெற்ற சர்வதேச தமிழ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

இதே பல்கலைக்கழகத்தில் பிரபல திரைப்பட நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷ்குமார் கௌரவ டாக்டர் பட்டம் பெற்றுள்ளார் .

சர்வதேச தமிழ் பல்கலைக்கழகம் வெளிநாடுகள் குறிப்பாக தொலைதூரக்கல்வியாக மலேசியா போன்ற நாடுகளில் கல்வி சேவைகளை வழங்கி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் சர்வதேச தமிழ் பல்கலைக்கழகம் இளங்கலை மற்றும் முதுகலைப் படிப்புகள் ஆராய்ச்சிப் படிப்புகளை வழங்கி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.