திருச்சியில் இருந்து சிங்கப்பூர் செல்பவர்கள் குவாரண்டின் இருக்க வேண்டும்.

திருச்சியில் இருந்து சிங்கப்பூர் செல்பவர்கள் குவாரண்டின் எனப்படும் தனிமைப்படுத்துதலில் இருக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது .

சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு VTL திட்டத்தின் மூலம் இயக்கப்படும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸில் செல்பவர்கள் குவாரண்டின் இருக்கத் தேவையில்லை.

இந்தியாவில் இருந்து சிங்கப்பூர் செல்வதற்கு இந்தியா சிங்கப்பூர் கூட்டு முயற்சியில் கூடுதல் விமானங்கள் இயக்கப்பட விருக்கின்றன அதன்படி சென்னை, மும்பை, டில்லி, இடையே VTL எனப்படும் முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்காக விமானங்கள் நவம்பர் 29 ஆம் தேதி முதல் இயக்கப்படுகிறது. இவ்வகை விமானங்களில் சிங்கப்பூர் செல்பவர்கள் குவாரண்டின் எனப்படும் தனிமைப்படுத்துதலில் இருக்கத் தேவையில்லை .

இந்தியாவில் இருந்து மும்பை, டெல்லி, சென்னையில் இருந்து மட்டுமே VTL விமானங்கள் சிங்கப்பூருக்கு இயக்கப்படுகின்றன. திருச்சி விமான நிலையம் இதுவரை VTL திட்டத்தின்கீழ் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது .

பயணிகள் புறப்படுவதற்கு முன்பும் பின்பும் மருத்துவ முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும்.

சிங்கப்பூர் செல்ல விரும்புபவர்கள் அனைவருமே சிங்கப்பூர் செல்வதற்கு முன்பு அங்கு செல்வதற்கு முன் அனுமதி பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Pre Approval (Entry Permit)

தற்போது வரை சிங்கப்பூர்ஏர்லைன்ஸ் விமானம் மட்டுமே VTL திட்டத்தில் சென்னை சிங்கப்பூர் இடையே சேவையை துவங்க இருக்கிறது.