சிங்கப்பூரில் இருந்து தமிழ்நாடு வர விரும்பும் தமிழர்களுக்காக- தமிழ்நாடு- சிங்கப்பூர் இடையே கூடுதல் விமானங்களை இயக்க வேண்டும்- தமிழக முதல்வர் மு .க. ஸ்டாலின் கடிதம் .

சிங்கப்பூர் மலேசியாவிற்கு கூடுதல் விமானத்தை இயக்க வேண்டும் என இந்திய மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சருக்கு தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்கள் கடிதம் .

சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுடன் கோவிட் கால விமானப் போக்குவரத்திற்கான ஒப்பந்தம் செய்து கொள்ளாத நிலையைக் குறிப்பிட்டு, அந்நாடுகளில் வாழும் புலம் பெயர்ந்த தமிழர்கள் தமிழ்நாட்டிற்கு வர விரும்பும் நேரங்களில், நேரடி விமான சேவையில்லாத காரணத்தால், துபாய், தோகா மற்றும் கொழும்பு மார்க்கமாக மாற்றுப் பாதையில் பயணம் மேற்கொள்ள வேண்டியுள்ளது என்றும், அதன் காரணமாக பல்வேறு இன்னல்களுடன் அதிக விமானக் கட்டணங்களைச் செலுத்த வேண்டியுள்ளதாகவும் சுட்டிக்காட்டி, அவர்கள் எதிர்கொள்ளும் இத்தகைய இடர்ப்பாடுகளைத் தீர்ப்பதற்கு தற்காலிக விமான சேவைகளை வழங்கிட ஏதுவாக, சிங்கப்பூர் மற்றும் மலேசியா நாடுகளுக்கு இடையில் தற்காலிக கோவிட் கால “விமானப் போக்குவரத்து ஏற்பாடுகள்” உடன்படிக்கையை செய்து கொள்ளுமாறு கோரி, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், மாண்புமிகு இந்திய மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்களுக்கு (25-11-2021) கடிதம் எழுதியுள்ளார்.