சிங்கப்பூர்- ஹவ்காங் பகுதியில் தீ விபத்து

தீ Blk 537 Hougang Street 52

இன்று (நவம்பர் 24) மாலை சுமார் 5.45 மணியளவில், மேற்கூறிய இடத்தில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

SCDF வந்தவுடன், 2வது மாடியில் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதியில் தீ கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது.

செங்காங் தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள், சுவாசக் கருவிகளை அணிந்து கொண்டு, புகை மூட்டப்பட்ட பகுதிக்குள் எச்சரிக்கையுடன் சென்றனர்.  சமையலறை பகுதியில் தீ ஏற்பட்டிருந்தது ஒரு நீர் ஜெட் மூலம் அந்த தீ அணைக்கப்பட்டது.  கடுமையான வெப்பம் மற்றும் புகையால் மீதமுள்ள பகுதிகள் பாதிக்கப்பட்டது.

SCDF வருகைக்கு முன்னர் மேல் தள பகுதிகளில் இருந்து சுமார் 20 குடியிருப்பாளர்கள் தாங்களாகவே வெளியேறினர்.  அவர்களில் 5 பேர் தீ எரியும் பகுதிக்கு அருகிலுள்ள படிக்கட்டு வழியாக வெளியேறும் போது புகையால் சூழப்பட்டனர்.  SCDF அவர்களை சிங்கப்பூர் பொது மருத்துவமனை மற்றும் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தது.

தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.