சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் – தமிழ்நாட்டில் இருந்து சிங்கப்பூருக்கு விமானம் இயக்குகிறது!

பல்வேறு உலக நாடுகள் தற்போது முழுமையான தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்களை தங்களின் நாட்டுக்குள் ஏற்கிறது. அதேபோல் சிங்கப்பூருக்கும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் மருத்துவ பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு செல்லலாம் .

தற்போது இந்தியாவில் இருந்து சிங்கப்பூர் செல்வதற்கான எல்லை கட்டுப்பாடுகள் எளிமை ஆக்கப்பட்டுள்ளன. அதன்படி தற்போது முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் சிங்கப்பூர் வருகை தருவதற்காக VTL திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

VTL திட்டத்தின் மூலம் சிங்கப்பூர் இந்தியா இடையே விமானங்களை இயக்குவதற்கு சிங்கப்பூர் மற்றும் இந்தியா கூட்டு முயற்சியில் தற்போது சென்னை, மும்பை, டெல்லி ,ஆகிய நகரங்களில் இருந்து VTL விமானங்கள் இயக்கப்படவுள்ளன.

நடப்பு மாதம் 29ஆம் தேதி முதல் சென்னை, மும்பை, டில்லி, இடையே சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் VTL திட்டத்தின் மூலம் இயக்கப்பட உள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் VTL திட்டத்தின் மூலம் இயக்கப்படும் விமானங்கள் மற்றும் அது தொடர்பான விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய பக்கத்தை பார்க்கவும் .

Vaccinated Travel Lane