சிங்கப்பூர்- திருச்சி இடையே வாரத்திற்கு 3 விமானங்கள் இயக்குகிறது -ஸ்கூட் நிறுவனம் -FlyScoott

தற்போது திருச்சிராப்பள்ளி, சிங்கப்பூர், மற்றும் சென்னை, கோயம்புத்தூர், இடையே வந்தே பாரத் திட்டத்தின் மூலம் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன .இருப்பினும் போதிய அளவிலான விமானங்கள் இயக்கப்படவில்லை என தெரிவித்தனர்.

தற்போது இந்தியர்கள் சிங்கப்பூர் வருவதற்கு சிங்கப்பூர் அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் தற்போது சிங்கப்பூருக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படவுள்ளன மேலும் நவம்பர் 29ம் தேதி முதல் அதிக அளவிலான விமானங்களும் இயக்கப்பட உள்ளன .

மிகப்பெரிய விமான நிறுவனங்களில் ஒன்றான ஸ்கூட் FlyScoot நிறுவனம் சிங்கப்பூர் திருச்சி இடையே வாரத்திற்கு மூன்று விமானங்களை இயக்கவிருக்கிறது.

டிசம்பர் 2ஆம் தேதி முதல் வாரத்திற்கு 3 விமானங்கள் திருச்சிராப்பள்ளி சிங்கப்பூர் இடையே இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.