475 நாட்களுக்குப் பிறகு சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு தனது சேவையை துவங்குகிறது- ஸ்கூட் FlyScoot விமானம்.

உலகம் முழுவதும் Covid-19 நோய்த்தொற்று காரணமாக வர்த்தகரீதியான பயணிகள் விமான  போக்குவரத்துக்கு இந்தியா தடை விதித்திருந்தது அந்த தடை தற்போது வரை நீடித்து வருகிறது.

இந்த நிலையில் வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்கள் தாயகம் திரும்புவதற்காக வந்தே பாரத் திட்டத்தின் மூலம் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்தியா சிங்கப்பூர் கூட்டு முயற்சியில் தற்போது அதிக அளவிலான விமானங்கள் இந்தியா சிங்கப்பூர் இடையே இயக்கப்படவிருக்கின்றன. வரும் நவம்பர் 29ஆம் தேதி முதல் கூடுதல் விமானங்கள் இயக்கப்பட உள்ளன.

சுமார் 475 நாட்களுக்குப் பிறகு சிங்கப்பூரில் இருந்து திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்திற்கு டிசம்பர் இரண்டாம் தேதி செல்கிறது ஸ்கூட் விமானம். வாரத்திற்கு மூன்று விமானங்கள் என டிசம்பர் இரண்டாம் தேதி முதல் சிங்கப்பூர் திருச்சிராப்பள்ளி இடையே விமானங்களை இயக்குகிறது ஸ்கூட் விமான நிறுவனம் .