VTL திட்டத்தின் மூலம் சிங்கப்பூர் -இந்தியா கூடுதல் விமானங்கள் தினசரி 6 விமானங்கள் இயக்கம் .

சிங்கப்பூருக்கு தற்போது அதாவது வருகிற 29-ஆம் தேதி முதல் முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அப்படி செல்பவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள தேவையில்லை எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது .

எல்லை கட்டுப்பாடுகளில் சிங்கப்பூர் தளர்வுகளை வழங்கியது ஆனால் இந்தியாவில் இருந்து சிங்கப்பூர் செல்வதற்கான விமானங்கள் மிகவும் குறைந்த அளவிலேயே இயக்கப்பட்டன .குறிப்பாக வந்தே பாரத் திட்டத்தின் மூலம் மட்டுமே இயக்கப்பட்டது. இதனால் பயணிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

தற்போது VTL திட்டத்தின் மூலம் இந்தியா சிங்கப்பூர் இடையே தினசரி ஆறு விமானங்கள் இயக்கப்படும் என தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது .

வருகிற நவம்பர் 29 ஆம் தேதி முதல் சென்னை, டெல்லி, மும்பை ,ஆகிய முக்கிய நகரங்களில் இருந்து தினசரி ஆறு விமானங்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

VTL திட்டத்தின் கீழ் இயக்கப்படும் விமானங்கள் பற்றிய விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.