சிங்கப்பூர் -தமிழ்நாடு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் டிசம்பர் மாதத்திற்கான புக்கிங் துவங்கியது .

இந்தியா சிங்கப்பூருக்கான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் டிசம்பர் மாதத்திற்கான விமான டிக்கெட் புக்கிங் துவங்கியது .

முதற்கட்டமாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் இல் தற்போது டிக்கெட் புக்கிங் துவங்கி உள்ளது. இதற்கான டிக்கெட்டுகளை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் இணையதளம் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மூலம் பெற்றுக் கொள்ளலாம் .

புக்கிங் துவங்கிய நேரம் முதல் தற்போது வரை டிக்கெட்டுகள் அதிவேகமாக விற்பனையாகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் கூடுதல் விமானங்களை இயக்க தற்போது கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .