சொந்த ஊருக்கு 6.5 லட்சம் கோடி பணத்தை அனுப்பி வைத்த வெளிநாட்டு ஊழியர்கள் .

சர்வதேச அளவில் இந்தியாவில் இருந்து பல்வேறு நாடுகளில் இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர் .இந்தியர்கள் குறிப்பாக அமெரிக்கா சிங்கப்பூர் மலேசியா தாய்லாந்து லண்டன் கனடா போன்ற நாடுகளில் அவர்கள் பணிபுரிந்தும் வருகின்றனர் .

வெளிநாடுகளில் பணிபுரியும் இந்திய வெளிநாட்டு ஊழியர்கள் மற்றும் தொழில் புரியும் இந்தியர்கள் பணப்பரிமாற்ற வங்கிகள் மற்றும் அதற்கென செயல்படும் அலுவலகங்கள் மூலமாக இந்தியாவிற்கு தொகை அதாவது பணத்தை அனுப்பி வைக்கின்றனர் .

நடப்பு ஆண்டில் மட்டும் வெளிநாட்டிலிருந்து இந்தியாவிற்கு ரூபாய் 645,544 கோடி பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது இது வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களால் இந்தியாவிற்கு அனுப்பப்பட்ட தொகையாகும்.

உலகிலேயே இந்தியாவிற்குதான் வெளிநாடுகளில் இருந்து பெருமளவில் இந்தியர்களால் பணம் அனுப்பப்படுகிறது .

சிங்கப்பூரை பொறுத்தவரையிலும் 1ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை பணம் அனுப்பு மையங்கள் மூலம் அதிக அளவிலான வெளிநாட்டு ஊழியர்கள் தங்களின் சொந்த ஊருக்கு பணம் அனுப்புவதை வழக்கமாக கொண்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது .