எல்லைகளை திறந்துவிட்ட சிங்கப்பூர் விமானம் இல்லாததால் தவிக்கும் தமிழக ஊழியர்கள்.

சிங்கப்பூரில் இருந்து இந்தியாவிற்கும் இந்தியாவில் இருந்து சிங்கப்பூர் செல்வதற்கும் தற்போது எல்லைகளை திறந்து விட்டுள்ளது சிங்கப்பூர் அரசு. இந்த சூழ்நிலையில் விமானப் போக்குவரத்து அதிகம் இல்லாததால் பெரும் சிக்கலை எதிர்நோக்குகின்றனர் வெளிநாட்டு ஊழியர்கள் மற்றும் சிங்கப்பூர் வாசிகள்.

சிங்கப்பூருக்கும் தமிழ் நாட்டிற்கும் இடையே தற்போது வந்தே பாரத் திட்டத்தின் மூலம் மட்டுமே விமானங்கள் குறிப்பிட்ட அளவில் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்திய மத்திய அரசு சிங்கப்பூர் உடன் தற்காலிக விமான ஒப்பந்தம் செய்து கொண்டால் மட்டுமே அதிக அளவிலான விமானங்கள் இயக்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

தற்போது எல்லை கட்டுப்பாடுகளில் விலக்கு அளித்துள்ள சிங்கப்பூருக்கு செல்ல விரும்பும் பயணிகள் தற்போது காத்துக் கிடக்கின்றனர். குறிப்பிட்ட அளவிலான விமானங்கள் மட்டும் இயக்கப்படுவதால் திருச்சி சென்னை கோயம்புத்தூர் ஆகிய விமான நிலையங்களில் இருந்து சிங்கப்பூர் செல்வதற்கான விமானங்கள் இல்லாததால் பயணிகள் சிங்கப்பூர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது .

வருகிற 29-ஆம் தேதி முதல் இந்தியா சிங்கப்பூர் இடையே அதிக விமானங்கள் இயக்கப்படு வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது .

சிங்கப்பூரிலிருந்து தமிழகம் வருகை தருவதற்கு அதிக அளவிலான ஊழியர்கள் தற்போது விருப்பத்துடன் உள்ளனர். விமானம் இல்லாத காரணத்தினால் வேறு வழி பயணமாக சிங்கப்பூரிலிருந்து இலங்கை துபாய் மற்றும் மேலும் பல நாடுகளுக்கு சென்று திருச்சி மற்றும் சென்னை திரும்புவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது .