சிங்கப்பூருக்கு வருகை தரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்- அமைச்சர் தகவல் .

சிங்கப்பூருக்கு தற்போது VTL எனப்படும் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்களுக்கான வருகைக்கான அனுமதியை சிங்கப்பூர் வழங்கியுள்ளது .

தற்போது சிங்கப்பூர் அரசு 13 நாடுகளுக்கு சிறப்பு வருகை அனுமதியை வழங்கியுஉள்ளது இதன் மூலம் இந்தியா உட்பட சில நாடுகளில் இருந்து சிங்கப்பூருக்கு முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் வருகை தரலாம்.

சிங்கப்பூருக்கு வருகை தரும் பயணிகளின் தினசரி எண்ணிக்கை தற்போது 10,000 வரை உயர்த்தப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறார் .

தற்போதைய காலகட்டத்தில் சிங்கப்பூருக்கு தினசரி பயணிகளின் வருகை எண்ணிக்கை 6 ஆயிரமாக உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

45,830 பேருக்கு சிங்கப்பூர் வருகை தருவதற்கான அனுமதி நவம்பர் 14ஆம் தேதி வரை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

சர்வதேச நாடுகளுக்கு எல்லையை திறந்துவிடுவது பற்றி சிங்கப்பூர் ஆலோசித்து அதற்கான நடவடிக்கைகளையும் தற்போது நடைமுறைப்படுத்தி வருவதை சர்வதேச பயணிகள் மற்றும் வெளிநாட்டு தொழிலாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.