இந்திய பயணிகள் இனி சிங்கப்பூருக்கு தனிமைப்படுத்துதல் இல்லாமல் பயணிக்கலாம்!

இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு வருகை தரும் பயணிகள் தனிமைப் படுத்திக் கொள்ளுதல் இல்லாமல் சிங்கப்பூருக்கு வருகை தர சிங்கப்பூர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

தற்போது இந்தியாவிலிருந்து வருகை தரும் பயணிகளை முழுமையான தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்களை சிங்கப்பூருக்குள் அனுமதிக்கிறது சிங்கப்பூர்.

VTL இத்திட்டத்தின் கீழ் தற்போது விரிவுபடுத்தப்பட்ட நடவடிக்கையை மேற்கொள்கிறது சிங்கப்பூர். அதன்படி இந்தியாவிலிருந்து வருகை தரும் பயணிகள் தங்களைத் தனிமைப் படுத்திக் கொள்ளாமல் சிங்கப்பூருக்கு பயணத்தை மேற்கொள்ளலாம் வருகிற 29-ஆம் தேதி முதல்.

தற்போது இந்தியாவுடன் சேர்த்து மேலும் சில நாடுகளுக்கு இந்த நடைமுறை அமலுக்கு வர இருக்கிறது .