தடுப்பூசி போட்டுக் கொண்ட 3,000 வெளிநாட்டு ஊழியர்கள் பொழுதுபோக்கு நிலையங்களுக்குச் தினந்தோறும் செல்லலாம் !.

சிங்கப்பூரில் தற்போது நோய்த்தொற்று எண்ணிக்கை குறைந்து வருகிறது. மேலும் நோய்த்தொற்று பரவல் கட்டுக்குள் வைத்துள்ளது சிங்கப்பூர் அரசு.

சிங்கப்பூரில் தற்போது நோய்தொற்று எண்ணிக்கை குறைந்து வருவதால் வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வருவதற்கும் சிங்கப்பூர் அரசு எல்லை கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது. அதன்படி முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்ட இந்தியர்களும் சிங்கப்பூருக்கு வருவதற்கான வாய்ப்பினை ஏற்படுத்தி வருகிறது.

தற்போது குறைந்த அளவிலான வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதியில் இருக்கும் ஊழியர்கள் சமூக ஒன்று கூடல்கள் மற்றும் சமூகம் சார்ந்த பொழுதுபோக்கு நிலையங்களுக்கு செல்வதற்கான வாய்ப்புகள் தற்போது உள்ளன. அது தற்போது விரிவுபடுத்தப்பட உள்ளது.

வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் உள்ள ஊழியர்கள் 98 சதவீதம் பேர் முழுமையான தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது புதிய தளர்வுகளின்படி வெளிநாட்டு ஊழியர்கள் அதாவது முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்ட வெளிநாட்டு ஊழியர்கள் 8 மணி நேரம்வரை பொழுதுபோக்கு இடங்களுக்கும் சமூகம் சார்ந்த இடங்களுக்கும் சென்று வரலாம் .

வெளிநாட்டு ஊழியர்கள் சமூகம் சார்ந்த இடங்கள் பொழுதுபோக்கு இடங்களுக்கு செல்வதற்கு முன்பு ஏ. ஆர்.டி பரிசோதனை செய்யப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு ஊழியர்கள் தினம் தோறும் எட்டு மணி நேரம் அவர்கள் பொழுதுபோக்கு சார்ந்த இடங்கள் மற்றும் சமூகம் சார்ந்த பகுதிகளுக்கு செல்ல முடியும் .

இந்த தளர்வுகளின் மூலம் முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்ட மூவாயிரம் வெளிநாட்டு ஊழியர்கள் தினம் தோறும் சென்று வரமுடியும் சமூகம் சார்ந்த இடங்கள் மற்றும் பொழுதுபோக்கு இடங்களுக்கு .

வரும் மாதத்தின் 3ஆம்தேதியிலிருந்து வெளிநாட்டு ஊழியர்கள் சமூகம் சார்ந்த இடங்கள் மற்றும் பொழுதுபோக்கு இடங்களுக்கு தினந்தோறும் சென்று வரலாம்.