சிங்கப்பூர் உடன் தற்காலிக விமான ஒப்பந்தம் செய்து கொள்ளாத இந்தியா -தமிழக விமான பயணிகள் சிங்கப்பூரில் அவதி

சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடு களுடன் விமான சேவை தொடர்பாக மத்திய அரசு தற்காலிக ஒப்பந்தம் செய்து கொள்ளாததால் தமிழர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

கொரோனா தாக்கம் அதிகரித்த தைத் தொடர்ந்து 2020 மார்ச் மாதம் முதல் மத்திய அரசு வெளிநாட்டு விமான சேவைகளுக்கு விதித்த தடை இன்றுவரை தொடர்கிறது. இந் நிலையில் மத்திய அரசின் விமான போக்குவரத்து அமைச்சகம் பல் வேறு நாடுகளுடன் ஏர் டிரான்ஸ் போர்ட் பப்புள்ஸ் என்ற ஒப்பந் தத்தை ஆக.11-ம் தேதி செய்து கொண்டு தற்காலிகவிமானபோக்கு வரத்து சேவைகளை நம் நாட்டின் விமான நிறுவனங்கள் மூலம் வழங்கி வருகிறது.

ஆனால், தமிழர்கள் அதிகம் வசிக்கும் சிங்கப்பூர், மலேசியா நாடுகளுடன் இந்த ஒப்பந்தம் செய்து கொள்ளப்படவில்லை. அதனால், வந்தே பாரத் திட்டத்தின் அடிப்படையில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களின் சேவை மட்டுமே இந்த நாடுகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது தான் சிங்கப்பூர் மற் றும் மலேசிய அரசுகள் இந்தியாவை சேர்ந்த சில குறிப்பிட்ட விசா வகை யினரை நிபந்தனைகளுடன் அனும திக்கத் தொடங்கியுள்ளன. இதனால் சிங்கப்பூர் மற்றும் கோலாலம்பூர் செல்லும் பயணிகள் எண்ணிக்கை விரைவில் கணிசமாக உயரும் வாய்ப்புள்ளது.

எனவே. மத்திய அரசு சிங்கப் பூர்,மலேசியாநாடுகளுடன் விமான சேவை தொடர்பாக தற்காலிக ஒப்பந்தம் செய்து கொண்டு விமான சேவைகளை அதிகரிக்க வேண்டும் என்பதே நாடு திரும்பிய தமிழர்களின் எதிர்பார்ப்பாகும்.

பொறியாளர் மைதிலி கிருஷ்ண சாமி ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியது: மத்திய அரசு ஒப்பந்தம் செய்து கொள்ளாததால் சிங்கப்பூரி லிருந்து தமிழகம் வரவேண்டிய பயணிகள் எமிரேட்ஸ், கத்தார் ஏர்வேஸ். ஸ்ரீலங்கன் ஏர்வேஸ் போன்ற பிற நாட்டு விமானங்கள் மூலம் துபாய், தோஹா, கொழும்பு வழியாக அதிக பயணக்கட்டணம் செலுத்தி ஊர் திரும்புகின்றனர்.

நடப்பு நவம்பர் மாதத்துக்கு சிங்கப்பூரிலிருந்து இந்தியா வரு வதற்கான விமான டிக்கெட்டுகள் காலியாகி விட்டன. டிசம்பர் மாதத் யில் ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்துக்கான அட்டவணை இன்னும் வெளியிடப்படவில்லை.எனவும் தெரிவித்தார்