சிங்கப்பூரில் புதிய அதிசயம்- புதிய சுற்றுலா மையம் SKy Helix

ஆசிய நாடுகளில் அதிக அளவிலான சுற்றுலா மையங்களை வைத்திருக்கக்கூடிய நாடுதான் சிங்கப்பூர். சிங்கப்பூரைப் பொறுத்தவரையில் சுற்றுலாவிற்கு பஞ்சமில்லாத ஒரு நாடு என்றும் அழகிய கட்டிடங்கள் அழகிய பூங்காக்கள் என அனைத்து வகையான சுற்றுலா அனுபவங்களையும் பெற்றிட சிங்கப்பூர் ஒரு சிறந்த நாளாகும்.

சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையமே ஒரு மிகப்பெரிய சுற்றுலா மையமாகவும் கருதப்படுகிறது. சாங்கி விமான நிலையம் மட்டுமல்லாமல் சிங்கப்பூரின் லிட்டில் இந்தியா சைனா டவுன் மற்றும் செந்தோசாத் தீவு மிக பிரம்மாண்டமான சுற்றுலா மையங்களை கொண்ட பகுதியாகும்.

தற்போது சிங்கப்பூரில் உள்ள சுற்றுலா மையங்களுக்கு மேலும் அழகு சேர்க்கும் வகையில் புதிய சுற்றுலா மையம் ஒன்று செயல்படவுள்ளது.

Sky Helix என்பதே அந்த சுற்றுலா மையத்தின் பெயர் ஆகும் .

இந்த சுற்றுலா மையத்தின் முதன்மையான செயல்பாடு என்பது திறந்தவெளியில் மேலே உயர்த்தி செல்லக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது .12 நிமிடங்கள் மேல செல்லும் அமைப்பை கொண்டதாகும்.

35 மீட்டர் உயரம் கொண்டதாகும் சுற்றுலாப்பயணிகள் மேலே சென்றவுடன் பத்து நிமிடங்கள் அங்கிருந்து மொத்த சிங்கப்பூரையும் கண்டுகளிக்கலாம் .

இந்த அமைப்பு கடல் மட்டத்திலிருந்து 79 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த சுற்றுலா அமைப்பின் கீழ் பகுதியில் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான உணவுப் பொருட்களும் கீழே விற்கப்படுகின்றன.

இந்த சுற்றுலா மையம் விரைவில் செயல்பட துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.