டெல்டா மாவட்டத்தில் மழை சேதங்களை பார்வையிட்டு நிவாரண பொருட்கள் வழங்கிய- பா.ஜ.க மாநிலத் துணைத் தலைவர்

டெல்டா மாவட்டங்களில் கடந்த 10 நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக ஆயிரக்கணக்கான ஹெக்டேர் க்கும் மேற்பட்ட பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளன. மேலும் தாழ்வான பகுதியில் தங்கியிருந்த குடியிருப்புவாசிகளின் வீடுகளும் உடமைகளும் சேதமடைந்துள்ளன. இந்த நிலையில் பா.ஜ.க மாநில துணைத்தலைவர் திரு .கருப்பு M. முருகானந்தம் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து அவர்களுக்கான நிவாரண பொருட்களை வழங்கினார்.

Delta Flood Relief Work By Bjp State Vice President

மேலும் என்கண் பகுதியில் வீடு சேதம் அடைந்த விவசாயிக்கு விரைவில் மத்திய அரசு திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தார்.

மேலும் விவசாயிகளின் கோரிக்கையை கேட்டறிந்த மாநில துணைத்தலைவர் திரு. கருப்பு முருகானந்தம் அனைத்து விதமான கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதற்கு மாநில அரசிடம் வலியுறுத்துவேன் என அவர் தெரிவித்தார் .

Delta Flood Relief Work By Bjp State Vice President

பாதிக்கப்பட்ட பகுதிகளில் விவசாயிகளை சந்தித்த பா.ஜ.க மாநிலத் துணைத் தலைவரிடம் அதிக அளவிலான நீர் வடிகால் உடைப்பு மூலமாக வயல்களுக்குள் பாய்ந்ததாக தெரிவித்தனர் .

நிவாரணப் பொருட்களை வழங்கிய போது பா.ஜ.க மாநிலத் துணைத் தலைவர் திரு. கருப்பு முருகானந்தம் அவர்களுடன் திரு.கோவி.சந்துரு மாநில விவசாய அணி செயலாளர், மாவட்ட தலைவர் கோட்டூர் ராகவன் ,மயிலாடுதுறை மாவட்ட மேலிடப் பார்வையாளர் பேட்டை சிவா,கோட்டூர் வினோத்,தோலி செல்வம்,R.சிவகுமார்,மாரி பிரபு, சாமி கார்த்தி, வசந்த் முருகேசன். ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் டெல்டா மாவட்டங்களில் பயிர் சேத பாதிப்பை நாளை மற்றும் நாளை மறுநாள் மாநிலத் துணைத் தலைவர் பார்வையிட போவதாகவும் திருத்துறைப்பூண்டி ஒன்றிய தலைவர் கொருக்கை செந்தில் அவர்கள் தெரிவித்தார்.இந்த நிகழ்வின் போது திரு. டி. ஆர். கணேசன் அவர்களும் உடனிருந்தார்.