இந்தியாவிலிருந்து சிங்கப்பூர் வருகை தரும் பயணிகள் தங்களை 10 நாட்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளலாம் !

சிங்கப்பூரில் தற்போது நோய்த்தொற்று எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில் எல்லை கட்டுப்பாடுகளில் தளர்வுகளை அறிவித்துள்ளது சிங்கப்பூர் அரசு. அதன்படி இந்தியா உள்ளிட்ட மேலும் சில நாடுகளில் இருந்து சிங்கப்பூருக்கு வருகை தரும் பயணிகள் தங்கள் வீடுகளிலேயே தனிமைப் படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

இந்தியா, பங்களாதேஷ், இலங்கை தாய்லாந்து, பிரேசில், மியன்மார் போன்ற நாடுகளில் இருந்து சிங்கப்பூருக்கு வருகை தரும் பயணிகள் தங்களை தாங்கள் விரும்பும் இடங்களிலேயே தனிமைப் படுத்திக் கொள்ளலாம்.

குறிப்பாக இப்படி தங்களை தனிமைப்படுத்திக் கொள்வோர் வீடுகளில் மூத்தவர்கள் யாரும் இருப்பினும் அவர்களுக்கு நோய்த்தொற்று எளிதில் ஏற்பட வாய்ப்பு இருப்பின் தனி அறைகளில் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கான வாய்ப்புகள் இல்லாத பட்சத்தில் வேறு இடத்தில் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது .

12ஆம் தேதி முதல் இந்த நடைமுறை நடப்புக்கு வரும்.

மேலும் இது தொடர்பான பயணவிவரங்களை முழுமையாக தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதளத்தை பார்க்கவும்.

Safe Travel