சிங்கப்பூரில் தமிழகத்தைச் சேர்ந்த கட்டுமான ஊழியர் உயிரிழப்பு -உடல் திருச்சி கொண்டு செல்லப்பட்டது.

தமிழகத்தின் திருப்பத்தூர் மாவட்டம் உமையப்பநாயக்கன் ஊரைச் சேர்ந்த குமரவேல் என்பவர் சிங்கப்பூரில் கட்டுமான துறையில் பணியாற்றி வந்துள்ளார் .

3-11-2021 அன்று குமாரவேல் திடீரென உயிரிழந்துள்ளார் அவர் இறப்புக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. மேலும் உயிரிழந்த குமரவேலுவின் உடல் நவம்பர் 6ஆம் தேதி காலை 6 மணிக்கு திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்திற்கு சென்றது.அங்கிருந்து அவரது சொந்த ஊருக்கு உடல் கொண்டு செல்லப்பட்டது.

மேலும் சிங்கப்பூரில் பணியாற்றிய திரு. குமரவேல் மற்றும் அவரின் இறப்பை பற்றி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைக் கழக செயலாளர் திரு.துரை வைகோ வெளியிட்ட ட்வீட் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.