திருச்சி விமான நிலையத்தில்  கடத்தல் தங்கம் பறிமுதல் – சிங்கப்பூர்  துபாயிலிருந்து வந்த விமானங்களில் சோதனை .

திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்படுவது வழக்கம் .

திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்திற்கு சிங்கப்பூர் துபாய் மலேசியா போன்ற நாடுகளிலிருந்து விமானங்கள் வருவதும் வழக்கம்.

அக்டோபர் 30-ஆம் தேதி திருச்சிராப்பள்ளிக்கு வருகை தந்த சிங்கப்பூர் மற்றும் துபாயில் இருந்து வருகை தந்த விமானங்கள் பரிசோதனை செய்யப்பட்டன சுங்கத்துறை அதிகாரிகளால் .

பரிசோதனையின்போது துபாயில் இருந்து கொண்டுவரப்பட்ட கடத்தல் தங்கத்தை திருச்சிராப்பள்ளி சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர் .

மேலும் மத்திய நுண்ணறிவு போலீசார் பயணிகளின் உடமைகளை பரிசோதனைகள் செய்யும்போதே மதுரையைச் சேர்ந்த 45 வயது உடைய தேவேந்திரன் என்பவர் தனது உடலில் மறைத்து கொண்டுவந்த 193 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

துபாயில் இருந்து கொண்டுவரப்பட்ட தங்கத்தின் மதிப்பு 9 லட்சத்திற்கும் மேல் என தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் கடத்தலில் ஈடுபட்ட தேவேந்திரனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.