திருச்சி -சிங்கப்பூர் நவம்பர் மாதத்திற்கான விமான பட்டியலை வெளியிட்டது- ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ்

தற்போது சிங்கப்பூரில் Covid-19 நோய்த்தொற்று எண்ணிக்கை ஏற்றம் மற்றும் இறக்கத்துடன் காணப்படுகிறது. இந்த நிலையில் எல்லை கட்டுப்பாடுகளில் சற்று தர்ளவுகளை வழங்கியுள்ளது சிங்கப்பூர் அரசு.

சிங்கப்பூரில் இருந்து தமிழகத்திற்கும் தமிழகத்தில் இருந்து சிங்கப்பூருக்கு சென்று வருவதற்கு அதிக விமானங்களை இயக்க வேண்டும் என விமான பயணிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த நிலையில் நவம்பர் மாதத்திற்கான கூடுதல் விமானங்களை இயக்குகிறது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்.

தற்போது இந்த விமானங்களில் பயணிக்க விரும்பும் பயணிகள் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் இணையதளம் மூலமாகவும் மேலும் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மூலமாகவும் விமான டிக்கெட்டை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானத்தில் பயணிக்கும் பயணிகள் அனைவருக்கும் மருத்துவ முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் அனைத்தும் பின்பற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.