தேவர் ஜெயந்தி:முக்குலத்துப்புலிகள் கட்சியின் மாநில நிறுவன தலைவர் ஆறு.சரவணத்தேவர் அறிக்கை .

தேவர் ஜெயந்தி, மருதுபாண்டியர் குருபூஜை உள்ளிட்ட விழாக்களின் முக்கியத்துவத்தை குறைக்கும் வகையில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ள தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்தும், அந்த கட்டுப்பாடுகளை தளர்த்துமாறு வலியுறுத்தியும் முக்குலத்துப்புலிகள் கட்சியின் மாநில நிறுவன தலைவர் ஆறு.சரவணத்தேவர் விடுத்துள்ள அறிக்கை

இந்த மாதம் அக்டோபர் 24 மற்றும் 27 ஆகிய தேதிகளில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர், காளையார்கோவில் ஆகிய இடங்களில் நடைபெற உள்ள விடுதலை போராட்ட மாவீரர்கள் மாமன்னர் மருதுபாண்டியர்களின் குருபூஜை மற்றும் அரசு விழாவுக்கும், அக்டோபர் மாதம் 30 ம் தேதி இராமநாதபுரம் பசும்பொன்னில் நடைபெற உள்ள தேவர் ஜெயந்தி விழாவுக்கும் தமிழக அரசு மேற்படி இரண்டு மாவட்டங்களிலும் 144 தடை விதித்துள்ளது. மேலும் இந்த விழாக்களுக்கு உள்ள முக்கியத்துவத்தை குறைக்கும் வகையில் பிற மாவட்டத்தில் இருந்து வணக்கம் செலுத்த வரும் மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளையும், கெடுபிடிகளையும் விதித்துள்ளது. பிற மாவட்ட மக்களுக்கு அனுமதி மறுக்கப் படுவதாகவும், வாடகை வாகனங்களுக்கு அனுமதி இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது. மேற்படி இரண்டு விழாக்களும் அரசின் சார்பில் நடத்தப்படும் அரசு விழாவாகும். இந்த விழாக்களுக்கே அரசு 144 தடை விதிப்பது ஏற்புடையதல்ல. பொதுமக்கள் சென்று வணக்கம் செலுத்தும் வகையில் கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என்று முக்குலத்துப்புலிகள் கட்சியின் சார்பில் தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.