சிங்கப்பூர் வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் குறைந்த நோய்த்தொற்று பதிவு.

சிங்கப்பூரில் சமூக அளவிலும் மொத்த எண்ணிக்கை தினசரி பாதிப்புகளிளும் தற்போது தொற்று எண்ணிக்கை சற்றே குறைந்துள்ளது.

பொதுவாக சிங்கப்பூரின் தினசரி நோய்தொற்று எண்ணிக்கை ஏற்றம் மற்றும் இறக்கத்துடன் காணப்படுகிறது.

இந்தநிலையில் வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதியில் நேற்றைய நோய்த்தொற்று எண்ணிக்கை அதாவது அக்டோபர் 20ஆம் தேதி நோய்த்தொற்று எண்ணிக்கையைவிட அக்டோபர் 21ஆம் தேதி சற்று குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அக்டோபர் 21ஆம் தேதி நிலவரப்படி வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் 500 பேருக்கு நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் மேலும் தொற்று பரவாமல் இருப்பதற்கு அனைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் சிங்கப்பூர் அரசு மேற்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Want To Know Daily Gold Price Click The Image